Monday, June 3, 2024

திருமணமான பெண் எதிர்க்கவில்லை என்றால் பாலியல் உறவு சம்மதமற்றதாக கருத முடியாது..! அலகாபாத் உயர்நீதிமன்றம்

பாலியல் உறவுகளில் முன் அனுபவம் உள்ள, அதாவது திருமணமான பெண்  வேறொரு ஆணுடன் உறவு கொள்வதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால், உடலுறவில் அந்த பெண்ணின் ஈடுபாடு சம்மதமற்றது என்று கருத முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த கருத்தை 40 வயது திருமணமான பெண் ஒருவர், தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறாமல், மற்றொரு நபரை திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் அவருடன் உறவில் இருந்துள்ளார். இதன் பிறகு அந்த நபர் மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த குற்றவியல் வழக்கை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம், திருமணமான பெண், வேறொரு ஆணுடன் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை உடலுறவில் ஈடுபடும் போது, அது பலாத்காரமாகவும், பெண்ணிற்கு சம்மதமற்றதாகவும் கருதமுடியாது என்று நீதிபதி சஞ்சய் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த பெண்ணிற்கு இரண்டு குழந்தைகளும் உள்ளன. இந்த வழக்கு விசாரணையின் அவசியத்தை உணர்ந்த நீதிமன்றம், இந்த குற்றவியல் வழக்கை ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கு ஒன்பது வாரங்களுக்கு பிறகு விசாரணைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES