எந்த கட்சிக்கும் செல்ல விருப்பம் இல்லை, என்னை நீக்கியது நியாயம் இல்லை – எம்எல்ஏ கு.க. செல்வம்

எந்த கட்சிக்கும் செல்ல விருப்பம் இல்லை என்று திமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க. செல்வம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்தார் திமுகவின் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க. செல்வம்.பின்னர் எம்எல்ஏ கு.க. செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், என்னுடைய தொகுதி விவகாரங்களை குறித்து தான் ஜே.பி.நட்டா அவர்களை சந்தித்தேன். திமுகவில் உட்கட்சி தேர்தலை ஸ்டாலின் முறையாக நடத்த வேண்டும். தமிழ் கடவுள் முருகனை தவறாக பேசியவர்களை மு..க. ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். நான் – பிஜேபியில் இணையவில்லை.தொகுதி மேம்பாட்டுக்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்திக்க வந்தேன். நட்டாவை சந்தித்தத்தற்காக என்மீது நடவடிக்கை எடுத்தால் எடுக்கட்டும் என்று தெரிவித்தார்.

இதன் பின் ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ. கு.க.செல்வம் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. மேலும் திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம் ,கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பதுடன் ,மேலும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக் கூடாது என விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.டெல்லியில் இருந்து சென்னை வந்த திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் ராமர் படத்திற்கு மரியாதை செலுத்தினார். இதனிடையே திமுக நோட்டீஸ்க்கு எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பதில் அளித்தார்.அவரது பதில் கடிதத்தில், கட்சி மாண்பை மீறவில்லை .மற்ற கட்சி தலைவர்களை சந்திக்கக் கூடாது என திமுக விதிகளில் இல்லை .கருணாநிதியை பாஜகவை சேர்ந்த மோடி நேரில் வந்து பார்த்தது அனைவருக்கு தெரியும். ஆகவே கட்சியின் மாண்பை நான் மீறியதாக கூறுவது சரியல்ல. இயற்கை நீதிக்கு விரோதமானது. ஆகவே என் மீதான குற்றச்சாட்டு நோட்டீஸை திரும்ப பெற வேண்டும். சட்டப்படி விசாரணை வைத்து நான் அறிக்கையில் கேட்ட விவரங்களை அளித்தால் விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் என்று தெரிவித்தார்.

இதன் பின் ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் .இந்நிலையில் இன்று ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ கு.க.செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,நான் கட்சி சார்பற்ற .என்னை கட்சியில் இருந்து நீக்கியது நியாயமே இல்லை, நீக்கியது ஜனநாயக படுகொலை. யார் எனக்கு வாய்ப்பு கொடுக்கிறார்களோ அவர்கள் கட்சி சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவேன். எந்த கட்சிக்கும் செல்ல விரும்பவில்லை .உதயநிதி ஸ்டாலின் தலையீடு தான் எனது பிரச்சினைக்கு காரணம்.திமுகவில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

‘செட்டில் ஆகிவிட்டு அடிங்க ..’ ! டி20யின் மாற்றத்தை ஆராயும் ரிக்கி பாண்டிங் !

Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…

2 hours ago

நெல்சனின் முதல் தயாரிப்பு.. வித்தியாசமான லுக்கில் கவின்.! கவனம் ஈர்க்கும் ப்ரோமோ வீடியோ!

Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…

2 hours ago

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பேட் கம்மின்ஸ் ! ஐசிசி தரவரிசையில் ஆஸி. கிரிக்கெட் அணி நம்பர் 1 !!

ICC Ranking  : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…

2 hours ago

20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் தோல்வி.! அமித்ஷா கடும் விமர்சனம்.!

Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…

2 hours ago

வேட்டையன் படப்பிடிப்பில் கோட் சூட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் க்ளிக்ஸ்…

Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

3 hours ago

விஜய் மகன் இயக்கும் படத்தில் நடிக்கிறீங்களா? கவின் சொன்ன பதில்!!

Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…

3 hours ago