எனக்கு தமிழ் தெரியாதா..? தமிழ் என் தாய்மொழி என ட்விட் செய்து பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்..!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் 1982-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி மிதாலிராஜ் பிறந்தார். இவர் தந்தை துரைராஜ் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர். ஆனால் விமானப்படையில் வேலை செய்த துரைராஜ் பல இடங்களில் வேலை செய்யச் சென்றதால் செகந்திராபாத்தில் பணியாற்றினார்.
இதனால் அங்கேயே மிதாலிராஜ் தனது கல்லூரிப் படிப்பையும் , பள்ளிப் படிப்பை முடித்தார். இதைத்தொடர்ந்து 1999-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதல் முறையாக மிதாலிராஜ் இந்திய அணிக்காக களம் இறங்கினார்.
முதல் போட்டியில் மிதாலிராஜ் 114 ரன்கள் குவித்தார். மிதாலி ராஜ் இந்திய அணிக்காக 10 டெஸ்ட் போட்டி , 206 ஒருநாள் போட்டி , 89 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மேலும் 20 ஆண்டுகளாக சர்வதேச போட்டியில் விளையாடிய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்நிலையில் மிதாலி ராஜிக்கு  தமிழ் தெரியாது எனவும் அவர் ஆங்கிலம் , தெலுங்கு மற்றும் இந்தி மட்டுமே நல்லா பேசுவார் என ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டு இருந்தார். அதற்கு பதிலளித்த மிதாலிராஜ்  “தமிழ் என் தாய்மொழி. நான் தமிழ் நன்றாக பேசுவேன். தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை” என தமிழில் ட்விட்  செய்து உள்ளார்.மேலும் ஒரு இந்தியன் என்ற பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.

murugan

Recent Posts

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

5 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

5 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

5 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

6 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

6 hours ago

அசத்தலான சுவையில் முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…

6 hours ago