தலயுடன் எப்போது நடிப்பீர்கள்..?? விஜய் சேதுபதி பதில்.!

அஜித் சார் கூட நான் நடிக்க ரெடி தான் என்று நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தற்போது விக்ரம், மும்பைகர், விடுதலை, காதுவாக்குல ரெண்டு காதல், போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாக மட்டும் நடிக்காமல் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து அசத்தி வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான, ரஜினி, விஜய், மாதவன், போன்ற நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ளார். தற்போது நடிகர் கமல் ஹாசனுக்கு வில்லனாக விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அஜித்திற்கு எப்போது வில்லனாக நடிப்பார் என்று ரசிகர்கள் காத்துள்ள நிலையில், சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டியளிக்கும் போது அவரிடம் அஜித் சாருடன் எப்போது நடிப்பீர்கள் என்று கேட்டதற்கு விஜய் சேதுபதி ” அஜித் சார் கூட நான் நடிக்க ரெடி. எல்லா நடிகர்கள் கூடயும்,  நான் நடிக்க ஆசை படுகிறேன். நான் ரெடி தான்” என்று கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.