mehreen pirzada

படுக்கையறை காட்சியில் நடிக்க நான் ரெடி! ‘பட்டாஸ்’ பட நடிகை பரபரப்பு பேட்டி!

By

படுக்கையறை காட்சிகளில் நடிக்க தனக்கு எந்த தயக்கமும் இல்லை என பட்டாஸ் படத்தில் நடித்த நடிகை மெஹ்ரீன் பிர்சாதா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

   
   

தமிழ் சினிமாவில் தனுஷிற்கு ஜோடியாக ‘பட்டாஸ் ‘ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை மெஹ்ரீன் பிர்சாதா. இவர் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். அதைப்போல தமிழில் இவருக்கு பட்டாஸ் படம் தான் முதல் படம் இல்லை இதற்கு முன்பும் நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா, ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார்.

ஆனால், பட்டாஸ் படத்தில் நடித்த பிறகு தான் தெலுங்கு, ஹிந்தி சினிமாவில் அவருடைய பெயர் வெளியே தெரிந்தது போல தமிழ் சினிமாவிலும் அவருடைய பெயர் தெரிந்தது. இந்த படத்தில் நடித்ததன் மூலம் பல இளைஞர்களின் ரசிகர்கள் கூட்டத்தை தமிழும் அவர் பெற்றுக்கொண்டார். ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை பட்டாஸ் படத்துக்கு பிறகு தமிழில் அவருக்கு பட வாய்ப்புகளே வரவில்லை.

நீ முதலில் கிளம்பு! ரத்னகுமார் பேசியதற்கு செம கடுப்பான நடிகர் விஜய்?

இருந்தாலும் தெலுங்கு, ஹிந்தியில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். இதற்கிடையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை மெஹ்ரீன் பிர்சாதா தான் படுக்கையறை காட்சில் நடிக்க தயாராக இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பி இருக்கிறார். இது குறித்து பேசிய மெஹ்ரீன் பிர்சாதா ” நான் இப்போது ஒரு ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறேன்.

அந்த திரைப்படத்திலும் படுக்கையறை காட்சிகள் உள்ளது. அந்த படமும் முழுக்க முழுக்க கிளாமருக்கு முக்கிய துவம் கொடுக்கும் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, படத்தில் சில கிளாமரான காட்சிகளும் படுக்கைஅறை காட்சிகளும் வரும். இந்த மாதிரி காட்சிகளில் நடிப்பதால் என்னுடைய தோழிகளே என்னிடம் என்ன இந்த மாதிரி காட்சியில் எல்லாம் நடிக்கிறாய் என்று கேட்கிறார்கள்.

என்னை பொறுத்தவரை இந்த மாதிரி காட்சிகள் எல்லாம் படத்தில் வரும் ஒரு அங்கம் தான். ஒரு நடிகை என்றால் படத்திற்கு எந்த மாதிரி காட்சிகள் தேவை என்றாலும் அதில் நடித்து கொடுக்கவேண்டும். அதனை தான் செய்கிறேன். எனவே, எனக்கு கதைக்கு தேவை என்றால் லிப் லாக் காட்சி, பிகினி உடை அணிந்து வரும் காட்சி, படுக்கையறை காட்சி என எல்லா காட்சிகளும் நடிப்பேன்.

ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்றால் எந்த காட்சியாக இருந்தாலும் அதனை யோசித்து எல்லாம் நடிக்கவேமாட்டேன். நடிப்புனு வந்துட்டா நடிப்பு தான் எனக்கு முக்கியம் ‘எனவும் நடிகை மெஹ்ரீன் பிர்சாதா தெரிவித்துள்ளார். இவர் இப்படி ஓப்பனாக பேசியுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், நடிகை மெஹ்ரீன் பிர்சாதா தற்போது கன்னடத்தில் நீ சிகூவரேகு என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023