வீட்டிலேயே சுலபமாக பிரியாணி பொடி செய்வது எப்படி..?

சாப்பாடு என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணவுகள் பிடிக்கும்.  கலாச்சாரத்திற்கும், வயதிற்கும், பழக்கவழக்கத்திற்கும் ஏற்றவாறு உணவு மாறுபடும். அதிலும், தற்போதைய காலகட்டத்தில் உள்ள உணவு வகைகளில் பலரும் பிரியாணி விரும்பிகளாக தான் உள்ளனர். பிரியாணி செய்வது சுலபமானதாக இருந்தாலும், வீட்டிலேயே பிரியாணிக்கு தேவையான பொடி செய்து வைத்துக் கொள்வது நாம் செய்யக்கூடிய பிரியாணிக்கு மேலும் சுவையை கொடுக்கும்.

பிரியாணி செய்யும் பொழுது அதில் நாம் சேர்க்க கூடிய பிரியாணி பொடி தான் முக்கியமான ஒன்றாக இருக்கும். இந்த பிரியாணி பொடியை நாம் கடையில் வாங்கி தான் சமைக்கிறோம். ஆனால் கடையில் பிரியாணி பொடி வாங்காமல், இனி வீட்டிலேயே பிரியாணி பொடியை தயாரித்து உபயோகியுங்கள். அதை எப்படி தயாரிப்பது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

  • மல்லி
  • சீரகம்
  • சோம்பு
  • மிளகு
  • கிராம்பு
  • ஏலக்காய்
  • கடல்பாசி
  • பிரியாணி இலை
  • அன்னாசி பூ
  • பட்டை
  • மராத்தி மொக்கு

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் மல்லி, சீரகம், சோம்பு, மிளகு, பட்டை, மராத்தி மொக்கு, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசி பூ மற்றும் கடல் பாசி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுக்கவும்.

அதன் பின்பு இவற்றின் சூடு ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும். பின் இந்த பொடியை ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளலாம். இனி பிரியாணி செய்யும் பொழுது கடையில் பொடி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் அரைத்து வைத்துள்ள பொடியே வாசனை அதிகமாகவும் அட்டகாசமான சுவை தர கூடியதாகவும் இருக்கும்.

Rebekal

Recent Posts

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

43 mins ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

49 mins ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

50 mins ago

ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு கவினுக்கு கால் செய்த சிம்பு! என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…

1 hour ago

டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! போலீசார் தீவிர சோதனை…

Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட…

1 hour ago

‘ஐபில் தொடர் உலகக்கோப்பைக்கு நிகரானது’ ! போட்டிக்கு பின் ஜஸ்டின் லாங்கர் கூறியது என்ன ?

Justin Langer : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஐபிஎல் தொடரை உலககோப்பையுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். நேற்று நடைபெற்ற…

2 hours ago