,
coconut milk rice

அசத்தலான சுவையில் தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி?

By

Coconut milk rice-தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருள்கள்;

  • எண்ணெய் = 2 ஸ்பூன்
  • நெய் =இரண்டு ஸ்பூன்
  • பட்டை= இரண்டு
  •  கிராம்பு =இரண்டு
  • பிரிஞ்சி இலை =ஒன்று
  • பெரிய வெங்காயம்= 2
  • பச்சை மிளகாய் =4
  • முந்திரி= 5
  • தக்காளி= ஒன்று
  • இஞ்சி பூண்டு விழுது= ஒரு ஸ்பூன்
  • புதினா கொத்தமல்லி இலைகள்= ஒரு கைப்பிடி
  • தேங்காய்ப்பால்= மூன்று கப்
  • அரிசி =ஒன்றை கப்
  • சீரகம்= அரை ஸ்பூன்

coconut milk (2)

செய்முறை;

குக்கரில் எண்ணெய்  மற்றும் நெய்யை சேர்க்கவும் .பிறகு பட்டை, கிராம்பு ,பிரிஞ்சி  இலை  சேர்த்து தாளித்து பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு பச்சை மிளகாய் மற்றும் முந்திரியை சேர்த்து கலந்து விடவும். இப்போது தக்காளியும் சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுதையும் பச்சை வாசனை போகும் வரை வதக்கி புதினாவை சேர்த்து கலந்து விடவும்.

cashew nut

இப்போது மூன்று கப் அளவு தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி  விடவும். பிறகு  ஒன்றரை கப் அரிசியையும் சேர்த்து அரை ஸ்பூன் சீரகம் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும். ஒரு கொதி வந்த பிறகு குக்கரை மூடி இரண்டு விசில் வைத்து இறக்கினால் சுவையான தேங்காய்ப்பால் சாதம் தயாராகிவிடும்.

Dinasuvadu Media @2023