38 C
Chennai
Sunday, June 4, 2023

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்.!!

வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில்...

LIVE: ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் – தொல் திருமாவளவன்.!!

இலவச பேருந்து சேவை ஒடிசா ரயில் விபத்து காரணமாக கட்டாக்,...

பொன்னியின் செல்வன் 2 எப்படி இருக்கு.? டிவிட்டர் விமர்சனம் இதோ.!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 2 -வது பாகம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

PonniyinSelvan2 Worldwide from today
PonniyinSelvan2 Worldwide from today [Image Source : Twitter/@LycaProductions ]

படத்தின் அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்ற காரணத்தால் படம் தமிழகத்தில் காலை 9 மணிக்கு தான் திரையரங்குகளில் வெளியானது. மற்ற இடங்களில் படம் சீக்கிரம் வெளியாகிவிட்டது. படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாகவும், பாகுபலியை மிஞ்சியதாகவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் டிவிட்டரில் தெரிவித்துள்ள விமர்சனத்தை பற்றி பார்க்கலாம். படத்தை பார்த்த ஒருவர் ” பொன்னியின் செல்வன் படம் அருமையாக இருப்பதாகவும், சியான் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் காட்சிகள் சிறப்பாக இருந்தன எனவும் படத்தின் பின்னணி இசை அருமையாக இருந்ததாகவும் மணிரத்னம் சார் அருமையாக படம் எடுத்துள்ளதாகவும்” பதிவிட்டு 5 ரேட்டிங் கொடுத்துள்ளார்.

மற்றோருவர்” படத்தின் முதல் பாதி இடைவேளையில் ட்விஸ்ட் & டர்ன்கள் இல்லாத தட்டையானது போல் இருந்தது ஆனால் அதன் திரைக்கதையில் ஈடுபட்டது நல்ல கதை சொல்லும் ஆக நக பாடல்சிறப்பாக இருந்தது. பிஜிஎம் அருமையாக இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

மற்றோருவர் “மொத்தத்தில் நான் பொன்னியின் செல்வன்2-ஐ மிகவும் ரசித்தேன். ஆம், இது புத்தகத்திலிருந்து மாற்றப்பட்டது, மேலும் புத்தகத்தில் எனக்கு பிடித்த சில பகுதிகள் உள்ளன. இருப்பினும், படத்தில் சில பகுதிகள் மாற்றியமைக்கப்பட்டவை சிறப்பாக இருந்தன. ஐஸ்வர்யா ராய் பச்சன்அருமையாக நடித்திருக்கிறார்” என பதிவிட்டுள்ளார்.

மற்றோருவர் ” பொன்னியின் செல்வன்2 முழுவதும் புத்திசாலித்தனமாக எடுக்கப்பட்டுள்ளது. சியான் விக்ரம் & ஐஸ்வர்யா ராய் மற்றும் அவர்களின் காட்சிகள் சிறப்பாக இருந்தன. கார்த்தி மீண்டும் ஜொலிக்கிறார் த்ரிஷா & ஜெயம்ரவியும் நன்றாக இருந்தார்கள். இசை & BGM ஒளிப்பதிவு அருமை” என பதிவிட்டு 5 ரேட்டிங் கொடுத்துள்ளார்.

மற்றோருவர் ” பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரமிக்க வைக்கிறது. படத்தின் காட்சிகள் அனைத்தையும் மணிரத்னம் அருமையாக எடுத்துள்ளார். கரிகாலன் & நந்தினியின் தீவிர மோதலின் காட்சிகள் அருமை. மொத்தத்தில் சொல்லவேண்டும் என்றால் படம் பிளாக் பஸ்டர்” என பதிவிட்டுள்ளார்.

Very Good First Half .ARR BGM 🔥🔥🔥 . Intermission Is Major HighLight Portion 👍👍

மற்றோருவர் “பொன்னியின் செல்வன்2 படம் தொடக்கக் காட்சி 15நிமிடங்கள் சூப்பர். நந்தினி-கரிகாலன் காட்சிகள் செமையாக இருந்தது. கார்த்தி நடிப்பு அருமையாக இருங்கிறது. பாடல்கள் மிக நன்றாக இணைந்துள்ளது. அருமையான கலைப்படைப்பு. மெதுவான வேகம். அதிக புள்ளிகள் இல்லாவிட்டாலும், அது ஈர்க்கக்கூடியது” என பதிவிட்டுள்ளார்.

“பொன்னியின் செல்வன்2 முற்றிலும் நேசித்தேன் படத்தில் நடித்த அனைவரும் அருமையாக இருந்தனர். ஆனால் ஐஸ்வர்யாராய், சியான் விக்ரம் & ஜெயம்ரவி மிகவும் கச்சிதமாக இருந்தார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இல்லாமல் படம் மற்றும் சில சக்தி வாய்ந்த காட்சிகள் ஒரே விளைவை ஏற்படுத்தாது” என பதிவிட்டுள்ளார்.

மற்றோருவர் “இப்போதுதான் பொன்னியின்செல்வன்2 பார்த்தேன், இது ஒரு மாஸ்டர்பீஸ்! மணிரத்னத்தின் இயக்கம், அற்புதமான கதைக்களம், பிரமிக்க வைக்கும் காட்சிகள் மற்றும் அற்புதமான இசை ஆகியவை கண்டிப்பாக பார்க்க வேண்டியவை” என பதிவிட்டுள்ளார்.

Waiting For Second Half#PonniyinSelvan2 #PS2

— Trendsetter Bala (@trendsetterbala) April 28, 2023

விமர்சனத்தை வைத்து பார்க்கையில் படம் கண்டிப்பாக வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் முதல் பாகத்தை விட பெரிய வெற்றியை பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி,  த்ரிஷா, ஐஷ்வர்யா லட்சுமி, ஷோபிதா, பார்த்திபன், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.