கட்சிகளின் கொடிகம்பங்களை அகற்றுங்கள்: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

  • தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் 50 ஆயிரத்திற்கும் அதிகமான அனுமதி இல்லாத கொடிகளை உள்ளதாக சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது இந்த விசாரணையின் பின்னர் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

அதாவது தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் ஊரகப் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து கொடிக் கம்பங்களையும் அகற்ற வேண்டும் எனவும் எத்தனை கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன எனவும் கணக்கிட்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

author avatar
Srimahath

Leave a Comment