கொளுத்திய வெயிலில் சூறைக்காற்றுடன் ‘கனமழை’..மகிழ்ச்சியில் ‘வேலூர்’ மக்கள்.!!

வேலூர் மாவட்டத்தில் தற்போது சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. காலை முதல் 107 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரித்த நிலையில் திடீரென கனமழை பெய்துள்ளதால் மக்கள் பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் வீசியதால், பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.மேலும் வேலூரில் சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்து வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், கேரளா மற்றும் தென் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தென்காசி, தேனி மாவட்டங்களில் மிதமான முதல் கனமழையும், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.