29 C
Chennai
Wednesday, June 7, 2023

ஒரே பதிவெண்ணில் இரண்டு வாகனங்கள் இயங்கியதால் அதிர்ச்சி..! அதிகாரிகள் தீவிர விசாரணை…!

வேலூரில், ஆவினில் ஒரே பதிவெண்ணில் இரண்டு வாகனங்கள் இயங்கியதால் ...

தமிழகம் முழுவதும் 66,70,825 பேர்… தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியீடு!

தமிழகம் முழுவதும் 66,70,825 பேர் வேலை வாய்ப்பிற்காக பதிவு...

Pinky….சும்மா கும்முனு இருக்கீங்க.! ஐஸ்வர்யா மேனனின் ஹாட் புகைப்படம்…

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் சித்தார்த் நடிப்பில்...

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் ‘கனமழை’ கொளுத்தும்…வானிலை மையம் எச்சரிக்கை.!!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

கனமழை 

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக  இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று நீலகிரி, கோயம்புத்தூர்,திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வெயில் 

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இன்று மற்றும் நாளை ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

சென்னை நிலவரம் 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை 

தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.