“ அரியர் தேர்வை ரத்து செய்ய அதிகாரம் உள்ளது “ – தமிழக உயர் கல்வித்துறை

மாணவர்களின் நலன் கருதி அரியர் தேர்வை ரத்து செய்ய பல்கலைக்கழங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பட்டப் படிப்புக்களுக்கு இறுதிப் பருவத்தேர்வு தவிர, மற்ற பருவ தேர்வுகள் ரத்து செய்வதாகவும், அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் உத்தரவிற்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்பட 2 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுவின் விசாரணையில், அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி யூஜிசி விதிகளுக்கு புறம்பானது என்று  ஏஐசிடிஇ திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது.

இதனிடையே  தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் சார்பில்  பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில்,மாணவர்களின் நலன் கருதி அரியர் தேர்வை ரத்து செய்ய பல்கலைக்கழங்களுக்கு அதிகாரம் உள்ளது. அனைத்து  பல்கலைக்கழங்களுடன் ஆலோசித்து தான் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது UGC விதிகளுக்கு முரணானது இல்லை.எனவே இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

தூங்கிக்கொண்டு இருந்த வாட்ச்மேன்! கேட் ஏறி விஜயகாந்த் செஞ்ச விஷயம்?

Vijayakanth : வாட்ச் மேன் தூங்கிக்கொண்டு இருந்தபோது விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கேப்டன் விஜயகாந்த் சாப்பாடு போட்டு உதவி செய்வது பலருக்கும்…

6 mins ago

வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு வழக்கு… உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்.!

VVPAT Case : 100% தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்களை இதில் காணலாம். தேர்தல் வாக்குப்பதிவின் போது, EVM மிஷினில்…

13 mins ago

மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பிய சீனா.. காரணம் என்ன?

China: சீனா தனக்கென சொந்தமாக உருவாக்கியுள்ள விண்வெளி நிலையத்திற்கு 3 விண்வெளி வீரர்களை 6 மாத பணிக்காக அனுப்பியுள்ளது. விண்வெளியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக ரஷ்யா உட்பட உலக…

31 mins ago

மீண்டும் ஏகிறியது தங்கம் விலை…சவரன் ரூ.360 உயர்வு.!

Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி…

49 mins ago

கில்லி படத்தில் ரஜினியை பார்த்து தான் விஜய் நடிச்சாரு! இயக்குனர் தரணி சொன்ன சீக்ரெட்!

Ghilli : கில்லி படத்தில் ரஜினியின் ஒரு படத்தின் கதாபாத்திரத்தை பார்த்து தான் விஜய் நடித்தார் என தரணி கூறியுள்ளார். நடிகர் விஜயின் சினிமா கேரியரில் பல…

1 hour ago

இந்தியாவில் நடைபெற வாய்ப்பு அதிகம் !! இந்திய செஸ் சம்மேளனம் தகவல் !!

Chess Championship 2024 : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தேவ் படேல் தெரிவித்து இருக்கிறார். கனடாவில் டொராண்டோ நகரில் நடத்தப்பட்ட பிடே…

1 hour ago