,

கணவர் இறந்த துக்கம்..3 குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து மனைவி தற்கொலை.!!

By

death

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தன்னுடைய 3 குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்து வந்தவர் ஈஸ்வரன். இவருடைய மனைவி தான் பாண்டீஸ்வரி. இவர்களுக்கு 16 மற்றும் 11 வயதுடைய மகள்கள் மற்றும் ஒரு வயது மகனும் இருந்தனர்.

இந்நிலையில், ஈஸ்வரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து, இந்த துக்கத்தை தாங்கமுடியாத பாண்டீஸ்வரி தனது மகள்கள் மற்றும் மகனுடன் அவருக்கு சொந்தமான வயலில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்க, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள் 4 சடலங்களை கைப்பற்றினார்கள். மேலும், இதுகுறித்து விசாரணை செய்து வருகிறார்கள். கிணற்றில் விழுந்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.