மாணவர்களிடையே பெரும் அச்சமும், பதற்ற மனப்பான்மையும் தற்போது உருவாகியுள்ளது – மு.க.ஸ்டாலின்

“அண்ணா பல்கலைக்கழக இணையவழி செமஸ்டர் தேர்வில் – மாதிரி தேர்வில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளைக் களைந்து – மாணவர்கள் ஐயப்பாடும், குழப்பமுமின்றி தேர்வுகளை எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள  அறிக்கையில்,சென்னை – அண்ணா பல்கலைக்கழகத்தின் இளநிலை மற்றும் முதுநிலைப் பொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகளை, மாணவர்கள் ‘ஆன்லைன்’ மூலமாக எழுதுவதற்குப் பல்கலைக்கழகம் திட்டமிட்டிருக்கிறது.அவ்வாறு மாணவர்கள் ‘ஆன்லைன்’ மூலம் இறுதித் தேர்வுகளை எழுதுவதற்கு முன்னோட்டமாக, மாதிரித் தேர்வுகளையும் (Mock Exams) 19-09-2020 அன்று நடத்தியிருக்கிறது. ஆனால், இதில் ஏராளமான தொழில்நுட்பக் குளறுபடிகள் ஏற்பட்டு, அதன் காரணமாக ‘ஆன்லைன்‘ வாயிலான இறுதித் தேர்வுகள் எப்படி நடைபெறப் போகிறதோ என்பது குறித்து மாணவர்களிடையே பெரும் அச்சமும், பதற்ற மனப்பான்மையும் தற்போது உருவாகியுள்ளது.
மாதிரித் தேர்வின் போது பல்கலைக்கழகத்தின் இணையவழி நிழற்படக்கருவி (Web Camera), தேர்வு எழுதிய பல மாணவர்களைப் பதிவு செய்யத் தவறி இருக்கின்றது. ஒலி அமைப்பும் (Audio System) சரியாக வேலை செய்யாது இருந்திருக்கின்றது. இன்னும் ஒரு படி மேலே போய், பல மாணவர்களுக்குப் பல்கலைக்கழகத்தின் குறிப்பிட்ட அந்த வலைப்பக்கத்தில் உட்புகவே (Log in) இயலாமற் போயிருக்கின்றது. இதன் விளைவாகப் பல மாணவர்கள் தேர்வே எழுத முடியாத நிலையும், அப்படி எழுதிய பல மாணவர்களும் கூடத் தேர்வு எழுதியதாகவே பதிவுசெய்யப்படாத சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கின்றது.
தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்பட்ட இத்தகைய குளறுபடிகளைக் களைந்து, மீண்டும் அனைத்து மாணவர்களுக்கும் மாதிரித் தேர்வினைப் பிரச்சினைகள் ஏதுமின்றி வெற்றிகரமாக நடத்திய பின்னரே, இறுதித் தேர்வுகளை நடத்திட வேண்டுமென அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் அவர்களுக்குப் பல முனைகளில் இருந்தும் கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.
ஆயினும், மாதிரித் தேர்வை அன்றைய தினம் எழுதாத மாணவர்களுக்கு மட்டுமே மற்றொரு மாதிரித் தேர்வு நடத்தப்படும் எனத் தேர்வுத்துறை தெரிவித்து இருப்பது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மாதிரித் தேர்வுகளிலேயே இவ்வளவு குளறுபடிகள் மலிந்திருந்தால், எந்த நம்பிக்கையில் இறுதித் தேர்வுகளை ‘ஆன்லைன்’ மூலம் எழுத முடியும் என்ற மனக்குழப்பமும், பெரும் பதற்றமும் மாணவர்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது. இதன் வாயிலாகத் தங்கள் தேர்வு முடிவுகளில் ஏற்படக்கூடிய பாதகமான சூழல், தங்கள் எதிர்காலத்தையே பாழ்படுத்திவிடக் கூடும் என்ற அச்சத்தில் மாணவர்கள் உறைந்து போய் உள்ளனர்.
இந்தப் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து, மாணவர்கள் எந்த ஐயப்பாடும், குழப்பமுமின்றி தங்கள் இறுதி செமஸ்டர் தேர்வுகளை எழுத உரிய ஏற்பாடுகளை உடனே மேற்கொள்ள வேண்டும் எனவும், தேர்வு எழுத முடியாத மாணவர்களின் நலனைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாண்புமிகு முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Recent Posts

இன்று தன்னம்பிக்கை நாயகன் அஜித்குமாரின் பிறந்த நாள்! குவியும் வாழ்த்துக்கள்!

HBDAjithkumar : நடிகர் அஜித்குமார் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில்…

11 mins ago

ஐபிஎல் தொடரின் மற்றொரு மிகப்பெரிய போட்டி !! சென்னை – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…

3 hours ago

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

11 hours ago

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

15 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

16 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

16 hours ago