Oneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே!

தொடர்ச்சியாக டாப்பு டக்கரூ போன்களை வெளியிட்டு வரும் ஒன்பிளஸ் நிறுவனம், தனது புதிய ஒன்பிளஸ் 8-ஐ ஜூன் மாதம் 4 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என தெரிவித்துள்ளது.

சீனா நாட்டின் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ், சமீபத்தில் தனது ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7 ப்ரோ ஆகிய போன்களை வெளியிட்டது. இந்த போன், அனைவரின் மனதை கொள்ளை கொண்டது. மேலும், இந்த மொபைல், அசுஸ் சென்போன் 6, ரெட்மி K20 ப்ரோ, போன்ற மொபைல்களுக்கு காம்படிட்டராக கொண்டுவரப்பட்டது. மேலும், அந்த மொபைல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது.

Introducing the OnePlus 7 Pro - YouTube

ஒன்பிளஸ் நிறுவனம், கடந்த சில நாட்களுக்கு  முன்பாக தனது ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8 ப்ரோ ஆகிய மொபைல்களை வெளியிட்டது. இந்த மொபைல், அமேசானில் மே 29 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வரும் எனவும் தெரிவித்தது.

நொய்டாவில் உள்ள ஒப்போ உற்பத்தி ஆலையின் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து, அந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளது. மேலும் ஒன்பிளஸ் நிறுவனம், தனது மொபைல்களை அங்குதான் அஸம்பில் செய்வதாக கூறப்படுகிறது. இதனால் வெளியாகும் தேதி தள்ளிப்போனது. இந்நிலையில் ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன், வரும் ஜூன் 4 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, அமேசான் வலைதளத்தில் நண்பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது என தெரிவித்தனர்.

ஒன்பிளஸ் 8, 8 ப்ரோ விபரங்கள்:

டிஸ்பிலே:

ஒன்பிளஸ் 8, ஆண்ட்ராய்டு 10 os-ல் இயங்குகிறது. இந்த மொபைலில் 6.55 அங்குல FHD + Fluid AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்ப்ளே 90Hz புதுப்பிப்பு வீதத்தைக் (Refreshing rate) உள்ளது. 

கேமரா:

ஒன்பிளஸ் 8 பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. முதன்மை கேமராவில் 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 சென்சார் உள்ளது. மேலும், 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா மற்றும் 16 மெகாபிக்சல் சென்சார்களுடன் வருகிறது. மேலும், செல்பி கேமராவை பொறுத்தளவில், 16 மெகாபிக்சல் புன்க்சுவல் கேமரா. இதில் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, ஒன்பிளஸ் 6, 6 ப்ரோ, 7, 7 ப்ரோ ஆகிய மாடல்களில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி:

பேட்டரியை பொறுத்தளவில், 4,300 Mah பேட்டரி உள்ளது. அதனை சார்ஜ் செய்ய, 30W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. மேலும், 8 பிரோவில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதர அம்சங்கள்:

ஒன்பிளஸ் 8, ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் ப்ராஸசரை கொண்டுள்ளது. 5 ஜி, 4 ஜி LTE, வைஃபை 6, புளூடூத் v5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்கள் ஆகியவை உள்ளன. மேலும், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. 

ரேம் மற்றும் விலை:

ஒன்பிளஸ் 8 (6 ஜிபி + 128 ஜிபி) – ரூ.41,999
ஒன்பிளஸ் 8 (8 ஜிபி + 128 ஜிபி) – ரூ.44,999
ஒன்பிளஸ் 8 (12 ஜிபி + 256 ஜிபி) – ரூ.49,999

ஒன்பிளஸ் 8 ப்ரோ (8 ஜிபி + 128 ஜிபி) – ரூ.54,999
ஒன்பிளஸ் 8 ப்ரோ (12 ஜிபி + 256 ஜிபி) – ரூ.59,999 ஆகும்.

மேலும், ஒன்ப்ளஸ் 8 ப்ரோ வெளியிடும் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.