செஞ்சி சந்தையில் ரூ.6 கோடிக்கு விற்கப்பட்ட ஆடுகள்..!

விழுப்புரம் செஞ்சி சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று சந்தை நடைபெறும். இந்த சந்தையில் வேலூர், தர்மபுரி, ஆம்பூர், பெங்களூர், புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பல வியாபாரிகள் இங்குள்ள சந்தையில் விற்கும் ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம்.

தற்போது பக்ரீத் பண்டிகை நெருங்கி கொண்டிருப்பதால் இந்த வாரச்சந்தையில் ஆடுகள் வாங்குவதற்கு பெங்களூர், சேலம், திருவண்ணாமலை, வேலுர், தருமபுரி, சென்னை போன்ற பல பகுதிகளிலிருந்து அதிகமான வியாபாரிகள் வந்துள்ளனர்.

அதேபோல் கிராமங்களிலிருந்து ஏராளமான ஆடுகளும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இந்த சந்தையில் செம்மறி ஆடுகள் ரூ.3,000 முதல் ரூ.4,000 வரையும், கருப்பு ஆடுகள் ரூ.8,000 முதல் ரூ.15,000 வரையும் விற்கப்பட்டுள்ளது.

இதனால் ஒரேநாளில் உடனுக்குடன் ஆடுகள் விற்கப்பட்டதால் ரூ.6 கோடிக்கு சந்தையில் ஆடுகள் விற்பனையாகியுள்ளது. இதனால் கிராமப்புற விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.