Harris Jayaraj

‘அதாரு அதாரு’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கெளதம் மேனன் – கீர்த்தி சுரேஷ்! வைரல் வீடியோ…

By

என்னை அறிந்தால் படத்தில் இடம்பெற்றுள்ள ‘அதாரு அதாரு’ பாடலுக்கு இயக்குனர் கெளதம் மேனன் மற்றும் கீர்த்தி சுரேஷ் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

   
   

இசையமைப்பாளர்கள் பொதுவாக ரசிகர்களுக்காக இசை கச்சேரி நடத்துவதுண்டு, இதனை முன்னணி மற்றும் பின்னணி இசையமைப்பாளர்கள் அனைவரும் நடத்துவர். இதில், ரசிகர்கள் பலரும் கலந்து கொண்டு இசை மழையில் ஜாலியாக கொண்டாடி மகிழ்வர். அந்த வகையில், ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சி நேற்று நந்தனம் மைதானத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கெளதம் மேனன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ‘அதாரு அதாரு’ பாடலுக்கு டான்ஸ் ஆட, மேடையில் ஹாரிஸ் ஜெயராஜும் டான்ஸ் ஆடி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர். தற்போது, இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில் சுவாரிஸ்யம் என்னவென்றால், என்னை அறிந்தால் படத்தை கெளதம் மேனன் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, நடந்த ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் பல குளறுபடிகள் நடைபெற்றது. இதனால், இந்த இசை நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது காவல்துறை.

 

அதன்படி, ஹாரிஸின் இசை நிகழ்ச்சிக்கு, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதல் டிக்கெட் விற்க கூடாது, உரிய நேரத்தில் நிகழ்ச்சியை முடிக்க வேண்டும் என பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அதனால், இந்த நிகழ்ச்சி சுமுகமாக நடந்து முடிந்தது.

மறக்குமா நெஞ்சம்

இசையமைப்பார் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் “மறக்குமா நெஞ்சம்” என்ற பெயரில் பிரமாண்ட இசைகச்சேரியை நடத்தினார். இந்த இசை நிகழ்ச்சியை காண பல ரசிகர்கள், ரசிகைகள் வருகை தந்திருந்தார்கள். வருகை தந்த அனைவரும் மிகுந்த சோகத்துடன் தான் திரும்பி சென்றார்கள் என்றே கூறலாம்.

வருகை தந்தவர்களுக்கு தங்களுடைய வாகனங்களை பார்க்கிங் செய்ய சரியான வசதி இல்லை. அது மட்டுமின்றி, மொத்தமாக 20,000 இருக்கைகள் கிட்ட இருந்த அந்த இடத்தில் அதற்கு மேல் பலரும் கூட்டமாக கூடிய காரணத்தால் கூட்டத்திற்குள் சிக்கி வெளியே வர முடியாமல் பலரும் திணறினார்கள். இதனால் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் கச்சேரி முடிவதற்கு முன்பே பாதியிலேயே வீட்டிற்கு சென்றனர். இதனையடுத்து மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023