இனி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு – யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கொரோனா பரவலை தடுக்க வார இறுதி நாட்களில் முழுமையான ஊரடங்கு அறிவித்துள்ளது. கொரோனா நோய் பரவலை தடுக்க வார இறுதி நாட்களில் மாநிலம் முழுவதும் கடுமையான ஊரடங்கு செயல்படுத்த உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என  தெரிவிக்கப்பட்டுள்ளது. மினி-லாக் டவுன் என்ற அறிமுகப்படுத்துவதன் மூலம், அலுவலகங்கள் மற்றும் சந்தைகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் மற்றும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களில் ஊரடங்கு வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து குறிப்பாக நெரிசலான பகுதிகளில் செயல்படுத்தப்படும். இந்நிலையில் இந்த நாட்களில் சந்தைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்படும். இருந்தாலும் வங்கிகள் செயல்படும் என்று கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி பி.டி.ஐ யிடம் கூறினார்.

இதற்கிடையில், உத்தரபிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 35,092 கொரோனா தொற்று பாதிப்பு. 11,490 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. மேலும் 22,689பேர் குணமடைந்து வீடு திரும்பினர் மற்றும் 913 உயிரிழப்புகள் உள்ளன. இந்நிலையில் அதிகபட்ச கொரோனா தொற்று கொண்ட 6 வது மாநிலமாக இருக்கிறது.

பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படாது என்று அவர் மேலும் கூறினார். மாநிலத்தின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் இந்த ஊரடங்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு குறைந்தபட்சம் ஜூலை மாதத்தில் இறுதிவரை இருக்கும் என்று அவஸ்தி கூறினார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.