மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன்.. பஞ்சாப் மாநில அரசு அதிரடி!

பஞ்சாப் மாநிலத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு இலவசமாக ஸ்மார்ட் போன் வழங்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அந்தவகையில், நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், வணிகவளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக, இந்தியாவில் உள்ள பல பள்ளிகளில் ஆன்லனில் வகுப்பு நடத்தி வருகிறது.

அந்தவகையில், பஞ்சாப் மாநிலத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு ஆண்ட்ராய்டு மொபைல் வசதி இல்லாத மாணவிகளுக்கு இலவசமாக ஸ்மார்ட் போன் வழங்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

முதல்கட்டமாக, அம்மாநிலத்தில் 11,12-ம் வகுப்பு பயிலும் 50,000 மாணவிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாகவும், அவ்வாறு வழங்கும் போன்கள் அனைத்தும் சீனா மொபைல்கள் இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.