கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் FTX இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கைது.!

கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் எஃப்.டி.எக்ஸ் (FTX) இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, சாம் பாங்க்மேன்-ஃப்ரைட் பஹாமாஸில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் எஃப்.டி.எக்ஸ் (FTX) இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் பேங்க்மேன்-ஃப்ரைட், கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் சரிவால் $10 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.81,218கோடி) வாடிக்கையாளர் நிதியை இழந்துள்ளதாக அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டு பஹாமாஸில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் மிகப்பெரிய கிரிப்டோ கரன்சி எக்ஸ்சேஞ்ஜ் நிறுவனமான எஃப்.டி.எக்ஸ்(FTX) கடந்த மாதம் வங்கி திவாலாகி, கிரிப்டோ உலகில் பெரும் அழிவை ஏற்படுத்தியது. எஃப்.டி.எக்ஸ் (FTX) நிறுவனம் சரிந்து வங்கி திவாலானதால் வணிகர்கள் அவர் மீது கடந்த மாதம் வழக்கு தாக்கல் செய்தனர்.

பேங்க்மேன்-ஃப்ரைட் அமெரிக்க சட்டத்தையும் மீறி அதிக ரிஸ்க் கான வர்த்தகத்தில் ஈடுபட்டார், இதுவே அவரது சரிவுக்கு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
Muthu Kumar

Leave a Comment