Sunday, June 2, 2024

துருக்கியில் பரவும் காட்டு தீ..! 1,200க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்..!

கிரீஸில் பரவி வரும் காட்டுத் தீ, அண்டை நாடான துருக்கியிலும் பரவி வருகிறது. இதனால் ஒன்பது கிராமங்களைச் சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த தீயில் 1,500 ஹெக்டேர்களுக்கு மேல் எரிந்துள்ளது. மேலும், 48 பேர் பயங்கர புகை காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த காட்டுத் தீயை துருக்கிய தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டுத் தீ காரணமாக ஏஜியன் கடலில் இருந்து மர்மாரா கடல் வரையிலான கடல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இரண்டு நாட்களுக்கு முன்பு (செவ்வாய் கிழமை) கிரீஸில் தீயணைப்பு வீரர்கள் 18 பேரின் எரிந்த உடல்களைக் கண்டுபிடித்தனர். அவர்கள் துருக்கிய எல்லையைத் தாண்டி, நாட்டின் வடகிழக்கு பகுதியில் இருந்து வந்த புலம்பெயர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

RELATED ARTICLES