‘Please! STOP’:முதலில் ‘உங்கள் விமானத்தை சுத்தம் செய்யுங்க’ ஒரே கரப்பான் பூச்சி விஸ்டாராவை கலாய்த்த டிஜே நிகில்

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும், டிஜேயுமான டிஜே நிகில் சினாபா விஸ்டாரா விமான நிறுவனத்தை தனக்கு “தேவையற்ற செய்திகளை” அனுப்புவதை நிறுத்துமாறு ட்விட்டரில் பதிவிட்டு கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் அவர் ட்விட்டில்  மும்பையில் பயணிக்க சுத்தப்படுத்தப்பட்ட வண்டிகளை வழங்கும் விஸ்தாரா செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார்.

விஸ்டாரா விமானத்தில் பயணம் செய்த அவருக்கு அதிகாலை 5:18 மணிக்கு வந்த மெசேஜில் “, அன்புள்ள வடிக்கையாளரே  உங்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட வண்டி ஒதுக்கப்பட்டுள்ளது. நீங்கள் வரிசைகளைத் தவிர்க்கலாம். காத்திருப்பு நேரம் இல்லாத 100% உறுதிசெய்யப்பட்ட வண்டியில் ஏறவு உங்கள் முன்பதிவை உறுதிப்படுத்திங்கள் என்று அனுப்பப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து அவர் விமானத்தின் உள்ளே இருந்து கரப்பான் பூச்சி ஒன்று இருக்கையில் சுற்றித் திரிவதை காணக்கூடிய வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதுபற்றி அவர் கூறுகையில் “சுத்திகரிப்பு செய்யப்பட்ட வண்டிகளை வழங்குவதை நீங்கள் குறிப்பிடுவது வேடிக்கையானது. உங்கள் விமானங்களை முதலில் சுத்தம் செய்வதில் இருந்து தொடங்குங்கள்,என்று ட்வீட் செய்துள்ளார்.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment