விருதுநகரில் பட்டாசு ஆலையில் தீ விபத்து..!

விருதுநகர் மாவட்டம் ஆம்பத்தூர் அருகே சோனி பட்டாசு ஆலை உள்ளது. இது

By bala | Published: Jul 07, 2020 03:46 PM

விருதுநகர் மாவட்டம் ஆம்பத்தூர் அருகே சோனி பட்டாசு ஆலை உள்ளது. இது நாக்பூர் சான்றிதழ் பெற்ற இந்த ஆலையில் பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பட்டாசு ஆலையில் மணி மருந்து கலவை உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது இதில் ஒரு அறை முற்றிலும் சேதமடைந்தது, லிங்கா புரத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ராம குருநாதன் இந்த விபத்தில் சிக்கி 70 சதவீத தீக்காயம் அடைந்தார்.

இந்த நிலையில் இதையடுத்து குருநாதனை  மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்,  மேலும் இதுகுறித்து ஆமத்தூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Step2: Place in ads Display sections

unicc