FIFA WorldCup2022: உலகக்கோப்பையில் அதிக கோல் அடித்த லியோனல் மெஸ்ஸி.!

முதல் அரையிறுதியில் குரோஷியாவிற்கு எதிராக கோல் அடித்ததன் மூலம்  மெஸ்ஸி, அர்ஜென்டினாவின் முன்னணி கோல் அடித்த வீரரானார்.

கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடரின் முதல் அரை இறுதியில், இன்று அதிகாலை 12: 30 மணிக்கு அர்ஜென்டினா மற்றும் குரோசியா அணிகள் மோதின. இந்த போட்டியில் 3-0 என்று கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி, குரோசியா அணியை வீழ்த்தி ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து உள்ளது.

இந்த போட்டியில் லியோனல் மெஸ்ஸி பல சாதனைகளை படைத்துள்ளார், ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் பெனால்டி முறையில் மெஸ்ஸி ஒரு கோல் அடித்தார். இந்த கோல் மூலம் மெஸ்ஸி, ஃபிஃபா உலகக்கோப்பைகளில் அர்ஜென்டினா அணிக்காக 11 கோல்கள் அடித்து அர்ஜென்டினாவின் முன்னணி கோல் அடித்த வீரர் என்ற பெருமையைப்பெற்றுள்ளார்.

இதற்கு முன் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல் அடித்த கேப்ரியல் பட்டிஸ்டுடா (10) வை பின்னுக்கு தள்ளி, 35 வயதான லியோனல் மெஸ்ஸி முதல் இடத்தில் உள்ளார். இந்த போட்டியில் பங்கேற்றதன் மூலம் மெஸ்ஸி, உலகக்கோப்பைகளில் 25 போட்டிகளில் பங்கேற்று, அதிகமுறை உலக கோப்பைகளில் பங்கேற்ற லோத்தர் மாத்தஸின்(25) சாதனையை சமன் செய்துள்ளார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment