Monday, June 3, 2024

இன்றே கடைசி நாள்.. நாளை முதல் ஃபாஸ்டாக் செல்லாது..!

அடுத்த சில நாட்களில் சாலைப் பயணத்தைத் திட்டமிடுபவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு உள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) கூற்றுப்படி, ஃபாஸ்டாக் வைத்திருப்போருக்கு புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதிக்குள் (இன்றைக்குள்) KYC சரிபார்ப்பை முடிக்காத ஃபாஸ்டாக் நாளை முதல் முடக்கப்படும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபாஸ்டாக் என்பது வாகனங்களுக்கு முன்பணம் செலுத்தப்பட்ட டேக் வசதியாகும், இது சுங்கச்சாவடிகளில் காத்திருக்காமல் போக்குவரத்தை நிறுத்தாமல் இயக்க அனுமதிக்கிறது. பொதுவாக காரின் கண்ணாடியில் ஃபாஸ்டேக் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு  வாகனத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஃபாஸ்டாக் வழங்கப்பட்டுள்ளதாகவும், RBI இன் உத்தரவை மீறி KYC இல்லாமல் ஃபாஸ்டாக் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த முயற்சியை மேற்கொண்டதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.  தற்போது ஃபாஸ்டாக் 8 கோடிக்கும் அதிகமானோர் இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி!

ஃபாஸ்டாக்  KYC சரிபார்ப்பு இன்றைக்குள் முடிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அப்படி இல்லையென்றால் வாகன ஓட்டிகள் அதிகம் செலவு செய்ய நேரிடும் எனவும் சுங்கச்சாவடிகளில் பணமாக செலுத்தினால் இரு மடங்கு வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

RELATED ARTICLES