வலிமை படத்தின் புதிய அப்டேட் ….. உற்சாகத்தில் ரசிகர்கள்..!

அஜித்தின் வலிமை திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமையை பிரபல நிறுவனமான யுனைட்டட் இந்தியா அதிக தொகை கொடுத்துக் கைப்பற்றியுள்ளதாக தகவல். 

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில்  நடித்து வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷூ நாயகியாகவும் ,கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, பேர்லி மன்னி உள்ளிட பலர் நடிக்கின்றனர் . யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் வலிமை படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு அப்டேட் கூட வெளியாகாத காரணத்தால் அஜித் ரசிகர்கள் சமூக வளைத்தளத்தில் கேள்வி எழுப்பி வந்தனர், அதனை தொடர்ந்து படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வலிமை படத்தின் இசை பணிகள் தொடங்கியதாக அறிவித்தது ரசிகர்களுக்கு மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

மேலும் தற்போது அதனை தொடர்ந்து அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் புத்தாண்டு தினத்தில் வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது ஆனால் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு ஒன்றும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தற்போது நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமையை பிரபல நிறுவனமான யுனைட்டட் இந்தியா அதிக தொகை கொடுத்துக் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.