விஜயகாந்தை கொன்றவர்களை கண்டறிய வேண்டும்! பரபரப்பை கிளப்பிய இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்!

கேப்டன் விஜயகாந்த் இன்று உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவருடைய இறப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையில், பிரபல திரைப்பட இயக்குனரான அல்போன்ஸ் புத்திரன் விஜயகாந்தை கொன்றவர்களை கண்டுபிடிக்கவேண்டும் என்று பதிவு வெளியீட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது ” இந்த பதிவு உதயநிதி அண்ணாவுக்காக. நான் கேரளாவில் இருந்து வந்து ரெட் ஜெயண்ட் அலுவலகத்தில் அவரை சந்தித்தபோது இரும்பு பெண்மணி ஜெயலலிதா மற்றும் கலைஞர் ஆகியோரை கொலை செய்தது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

அந்த வகையில் இப்போது கேப்டன் விஜயகாந்தை கொன்றது யார் என்பதை இப்போது கண்டுபிடிக்க வேண்டும்.  ஏற்கனவே இந்தியன் 2 செட்டில் ஸ்டாலினையும் கமல் சாரையும் கொல்ல முயற்சித்தார்கள். நீங்கள் இப்போது கில்லர்கள் யாரு என்று கண்டுபிடிக்கவில்லை என்றால் கொலையாளிகளின் அடுத்த இலக்கு நீங்கள் அல்லது ஸ்டாலின் சார். நெரம் ஹிட் ஆனதற்காக எனக்கு ஒரு கிஃப்ட் கொடுத்தது உங்களுக்கு நினைவிருக்கும்.

நீங்கள் ஐபோன் மையத்தை அழைத்து 15 நிமிடங்களில் எனக்கு ஒரு கருப்பு நிற ஐபோன் தந்தீர்கள். எனவே, உதயநிதி அண்ணா என்னை நினைவில் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். கொலையாளிகளையும் அவர்களின் நோக்கத்தையும் கண்டுபிடிப்பது உங்களுக்கு எளிமையான விஷயமே” எனவும் உதயநிதியை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இவருடைய அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் ஏற்கனவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் என்னுடைய சினிமா பயணத்தை நிறுத்துகிறேன். எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக தியேட்டருக்கான என்னுடைய சினிமாவின் பயணத்தை நிறுத்திக்கொள்ள முடிவு எடுத்து இருக்கிறேன்” என்று அல்போன்ஸ் புத்திரன் கூறியிருந்தார். அந்த பதிவுக்கு பிறகு இவர் அடிக்கடி சம்பந்தம் இல்லாத வகையில் பதிவுகளை வெளியீட்டு வருகிறார். எனவே, தற்போது விஜயகாந்த் பற்றி அவர் இப்படி போட்டுள்ள பதிவை பார்த்த பலரும் உங்களுக்கு என்னாச்சு? எனவும் கொஞ்ச நேரம் சும்மா இருங்க எனவும் கூறி வருகிறார்கள்.

Alphonse Puthren
Alphonse Puthren File Image
author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.