7 ஆஸ்கர் விருதுகளை தட்டி சென்ற ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’.!

சினிமா உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது விருது வழங்கும் விழா அமெரிக்காவில் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி விறு விறுப்பாக நடைபெறுகிறது. 95-வது ஆஸ்கார் விருது விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் டால்பி அரங்கில் நடைபெறுகிறது.

இந்த விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர் ஆகிய 7 பிரிவுகளில் சீன திரைப்படமான ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ (‘Everything Everywhere All at Once’) திரைப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

  1. சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது – ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’
  2. சிறந்த நடிகைக்கான விருது -மிஷெல் யோ
  3. சிறந்த துணை நடிகருக்கான விருது- கேஹுய் குவான்
  4. சிறந்த துணை நடிகருக்கான விருது – ஜேமி லீ
  5. சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது – டேனியல் கிவான், டேனியல் ஸ்கினெர்ட்
  6. சிறந்த படத்தொகுப்பிற்கான விருது – பால் ரோஜர்ஸ்
  7. சிறந்த திரைக்கதைக்கான விருது- ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’

ஒரே படத்திற்காக 7 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது மிஷெல் யோ வென்றுள்ளது இதுவே முதன் முறை. அதைப்போல, ஆஸ்கர் விருது வென்ற முதல் ஆசிய பெண் இவர் என்ற என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment