இந்தியா மீது இங்கிலாந்து அணி வீரர்கள் கோபம் – ஐபிஎல் போட்டியில் இருந்து வெளியேற விருப்பம்!

மான்செஸ்டரில் நடைபெற இருந்த 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதால், ஐபிஎல்-லிருந்து இங்கிலாந்து வீரர்கள் வெளியேற விரும்புவதாக தகவல்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோருக்கு சமீபத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். நேற்று இந்திய குழுவினருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இந்தியாவின் பிசியோ நிபுணர் யோகேஷூக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த சூழலில் 5வது டெஸ்ட் போட்டி நேற்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால், இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் ‘நெகட்டிவ்’ என முடிவு வந்தது. பிசியோ நிபுணருக்கு கொரோனா உறுதியான நிலையில், இந்திய வீரர்கள் விளையாடும் சூழல் இல்லை என பிசிசிஐ -க்கு கடிதம் எழுதினர்.

கொரோனா காரணமாக மான்செஸ்டரில் நடைபெற இருந்த 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பங்கேற்க மறுத்ததால் இரு அணிகளுக்கு இடையே உறவை கெடுத்துள்ளது என கூறப்படுகிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் சகோதரத்துவத்தில் உள்ள பலர் விராட் கோலி மற்றும் அவர் தலைமையிலான இந்திய அணியை விமர்சிக்கிறார்கள். சிலர் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2021 இலிருந்து வெளியேற விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் இங்கிலாந்து & வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (இசிபி) இடையே ஆரோக்கியமான உறவைக் கொண்டுள்ளன.

இருப்பினும், கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து டீம் இந்தியா 11வது மணிநேரத்தில் விலகிய பிறகு, பல ஆங்கில கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தப்படாமல் விடப்பட்டதாக குற்றசாட்டு கூறப்படுகிறது. இந்திய வீரர்கள் மான்செஸ்டரில் வியாழக்கிழமை சுற்றித் திரிவதைக் கண்டதாகக் இங்கிலாந்து அணியின் சில உறுப்பினர்கள் தெரிவித்தாக கூறப்படுகிறது.

கொரோனா பரவல் சூழலில் இந்திய வீரர்கள் வெளியில் சுற்றாமல், தங்கள் ஹோட்டல் அறைகளுக்குள் தங்கியிருக்க வேண்டும் என்றும் குற்றசாட்டிக்கின்றனர். போட்டி ரத்து செய்யப்பட்டதால் ECB மற்றும் போட்டியை ஏற்பாடு செய்வதில் ஈடுபட்டுள்ள மற்றவர்களுக்கு பல மில்லியன் பவுண்டுகள் செலவாகும் என கூறப்படுகிறது.

செப்டம்பர் 19-ஆம் தேதி ஐபிஎல் 2021 மீண்டும் தொடங்குவதில் எந்த தடையும் இல்லை என்றால், ரத்து செய்யப்பட்ட போட்டியை ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைத்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த செயல் இங்கிலாந்து வீரர்களை மிகவும் கோபப்படுத்தியதாக கூறப்படுகிறது.

பிசிசிஐ தனது இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இங்கிலாந்திலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு புறப்படுவதைத் திட்டமிடுகையில், 5 இங்கிலாந்து டெஸ்ட் வீரர்களும் ஐபிஎல் லீக்கில் பங்கேற்க உள்ளனர். ஜானி பேர்ஸ்டோ, சாம் கரன், மொயீன் அலி, டேவிட் மாலன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகிய வீரர்களில் சிலர் 5வது டெஸ்ட் ரத்து செய்யப்பட்டதால் ஐபிஎல்லிலிருந்து வெளியேற நினைப்பதாக கூறப்படுகிறது.

Recent Posts

கிரிவலம் செல்லும் போது செய்ய வேண்டியதும் ..செய்ய கூடாததும்..!

கிரிவலம் -கிரிவலம் ஏன் செல்ல வேண்டும் என்றும் அதற்கான பலன்களைப் பற்றியும் இப்பதிவில் காணலாம். கிரிவலம் என்றால் மலையை வலம் வருதலாகும். அதாவது மலையை சுற்றி வழிபாடு…

2 hours ago

IPL2024: டெல்லி அபார வெற்றி… பிளே ஆப் வாய்ப்பை இழந்த டெல்லி , லக்னோ..!

IPL2024: லக்னோ அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை  இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…

11 hours ago

டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து.! ஒருவர் உயிரிழப்பு.!

சென்னை : டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டெல்லியில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் சி.ஆர் கட்டிடத்தில் இன்று பிற்பகல் 3…

15 hours ago

சுப்மன் கில்லை நம்புங்க .. ஒரு கேப்டனா கண்டிப்பா திரும்ப வருவார் ! நம்பிக்கை அளிக்கும் மேத்யூ ஹைடன் !!

சென்னை : ஐபிஎல் தொடரின் குஜராத் அணியின் கேப்டனான சுப்மன் கில்லை அணியில் இருப்பவர்கள் நம்ப வேண்டும் என ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய போது கூறி இருந்தார்.…

15 hours ago

விஜய் கேட்ட பெரிய சம்பளம்? தளபதி 69 படமே வேண்டாம் என ஓடிய தயாரிப்பு நிறுவனம்!

சென்னை : தளபதி 69 படத்தில் நடிக்க விஜய் கேட்ட சம்பளத்தை கேட்டு ஆர்ஆர்ஆர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியடைந்துள்ளது. நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு…

15 hours ago

இஸ்ரேல் தாக்குதல்.. முன்னாள் இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு.!

சென்னை: ரஃபாவில் ஐக்கிய நாடுகள் சபையின் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் முன்னாள்…

15 hours ago