,
NAMvENG

41 ரன்களில் நமீபியா அணியை வீழ்த்தியது இங்கிலாந்து ..! சூப்பர் 8 வாய்ப்பு யாருக்கு?

By

டி20I: இன்று நடைபெற்ற  டி20 உலகக்கோப்பையை தொடரின் இன்றைய 2-வது லீக் போட்டியானது மழையின் காரணமாக ஓவர்களை குறைத்து 10 ஓவர்களாக நடத்தப்பட்டது.

டி20 உலகக்கோப்பையின் இன்றைய 2-வது போட்டியில் இங்கிலாந்து அணியும், நமீபியா அணியும் அன்டிகுவாவில் உள்ள விவிரிச்சர்ட்ஸ் மைதானத்தில் மோதியது. மோசமான வானிலையாலும், மழை பொழிவின் காரணத்தாலும் தாமதாகவே இந்த போட்டியானது ஆரம்பிக்கப்பட்டது. மேலும், இந்த போட்டியை DLS முறைப்படி முதலில் 11 ஓவர்களாக குறைத்து விளையாடினார்கள்.

அதன்படி மிக தாமதமாகவே இந்த போட்டியின் டாஸ் போடப்பட்டது அதில் டாஸை வென்ற நமீபியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதலில் 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தாலும், அதன் பின் அதிரடியுடன் விளையாட தொடங்கினார்கள்.

அதன் பின் 9-தாவது ஓவரில் மீண்டும் மழை குறிக்கிட்டதால், போட்டியானது DLS முறைப்படி 10 ஓவராக குறைக்கப்பட்டது. இதனால் மீதம் இருந்த 2 ஓவரிலும் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 10 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்திருந்தது.  மேலும், DLS முறைப்படி நமீபியா அணிக்கு 127 ரன்களை இலக்காக நிர்ணயித்தினர்.

இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்ட்ரோ 18 பந்துக்கு 31 ரன்களும், ஹரி புரூக் 20 பந்துக்கு 47 ரன்களும் எடுத்து  அதிரடியாக விளையாடி இருந்தனர். அதனை தொடர்ந்து 10 ஓவர்களில் 123 என்ற இமாலய இலக்கை எடுப்பதற்காக நமீபியா அணி பேட்டிங் களமிறங்கியது.

இதனால், தொடக்கமுதலே அடிக்க முயன்றாலும் இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சில் பவுண்டரி அடிக்க முடியாமல் திணறியே வந்தனர். இருப்பினும், 6-10 ஓவர்களில் சற்று அதிரடியாக ஓரிரெண்டு பவுண்டரிகள், சிக்ஸர்களை அடித்து கொண்டே இருந்தனர்.

மேலும், தொடர்ந்து விளையாடிய நமீபியா அணியால் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 127 என்ற இலக்கை 10 ஓவர்களில் அடைய முடியாமல் தோல்வியை தழுவியது. 10 ஓவர்கள் முழுவதும் (DLS) பேட்டிங் விளையாடிய நமீபியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

நமீபியா அணியில் அதிகபட்சமாக மைக்கேல் வான் லிங்கன் 33 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி  ரன்கள் 41 ரன்கள் வித்தியாசத்தில் (DLS) வெற்றி பெற்றது. மேலும், இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும் அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுமா என்பதை தெரிந்து கொள்ள ஸ்காட்லாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் போட்டியின் முடிவிலேயே தெரியும்.

அந்த போட்டியில் ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றாலோ இல்லை மழையின் காரணமாக போட்டி தடைபெற்றாலோ ஸ்காட்லாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி விடும், மாறாக ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றால் மட்டுமே இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023