Elon Musk

தப்பாட்டம் போஸ்டரை பகிர்ந்து ஆப்பிளை கலாய்த்த எலான் மஸ்க்!

By

எலான் மஸ்க்: உலகின் தலைசிறந்த பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ஆப்பிள் – ஓபன் ஏஐ விவகாரத்தில் தப்பாட்டம் படத்தின் போஸ்டரை பகிர்ந்து விமர்சித்துள்ளார்.

உலகின் மாபெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தற்போது விண்வெளி ஆராய்ச்சியில் தனது ஆர்வத்தை காட்டி கொண்டிருக்கிறார். அதில் இணைய சேவையை வழங்கும் செயற்கைக்கோள்களை செலுத்துவது எப்படி? என்றும் ஒரு ராக்கெட்டை எப்படி மீண்டும் பயன்படுத்துவது என அவர் ஆராய்ச்சியில் தொடர்ந்து தனது கவனத்தை செலுத்தி கொண்டு வருகிறார்.

மேலும், டெஸ்லா நிறுவனத்தின் அதிபரான இவர் எலக்ட்ரிக் கார் தயாரிப்பிலும் தீவிரம் காட்டி வந்த நிலையில் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அதை தொடர்ந்து தனது நிறுவனத்துடன் போட்டியிடும் மற்ற நிறுவனங்களை வம்புக்கிழுப்பதை வழக்கமாகவே கொண்டவர் தான் எலான் மஸ்க். சமூக வலைதளங்களில் தன்னை எப்போதுமே ஆக்டிவாக வைத்து கொள்ளும் இவர் தினமும் X-இல் ஒரு பதிவுகள் பதிவிட்டு கொண்டே வருபவர் ஆவார்.

இந்நிலையில், தற்போது இரு பெரிய நிறுவனங்களான ஆப்பிள் – ஓபன் ஏஐ நிறுவனங்களை அவர் தற்போது சீண்டி இருக்கிறார். உலக அளவில் மிகப் பிரபலமாக இருக்கும் ஆப்பிள் நிறுவனம், தங்களது மேக்புக், ஐபோன், ஐபாட் உள்ளிட்ட சாதனங்களில் ஓபன் ஏஐ டூல்களை இனி பயன்படுத்தலாம் என ஆப்பிள் சிஇஓ டிம் குக் (CEO Tim Cook) தனது X பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அதனை கண்டித்து ரீட்வீட் செய்த எலான் மஸ்க், ரீட்வீட் செய்துள்ள எலான் மஸ்க் ஆப்பிள் சாதனங்களில் ஓபன் ஏஐ டூல் (Open AI) பயன்பாட்டுக்கு வந்தால் அந்த சாதனங்களை தனது நிறுவனங்களில் பயன்படுத்த தடைவிதிப்பதாக” தனது X தளத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தனது X பக்கத்தில் தமிழ் மீம் (Meme) ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். தப்பாட்டம் படத்தில் நாயகனும் நாயகியும் இளநீரில் ஸ்ட்ரா போட்டு குடிக்கும் போஸ்டர் தான் அது. தற்போது, இந்த மீமை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து ஆப்பிள் மற்றும் ஓபன் ஏஐ நிறுவனத்தை கலாய்த்து இருக்கிறார் எலான் மஸ்க். மேலும், இந்த சம்பவமானது நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டும் வருகிறது.

Dinasuvadu Media @2023