வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்ட முட்டை விலை…!

நாமக்கல் மண்டலத்தில் வரலாறு காணாத வகையில் முட்டை விலை 5.25 காசுகளாக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம். அதற்கு உதாரணமாக 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது. அதற்கு பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது. அதன் படி இன்று வரலாறு காணாத வகையில் முட்டை விலை உச்சம் தொட்டுள்ளது.

இன்று நாமக்கல் மண்டலத்தில் முட்டை பண்ணை கொள்முதல் விலை 20 காசுகள் உயர்த்தப்பட்டு, 5.25 காசுகளாக விற்பனையாகிறது. இதற்கு முன் அதிகபட்சமாக கடந்த 2017ம் ஆண்டு முட்டை விலை 5.16 காசுகள் நிர்ணயிக்கப்பட்டது. அதன் பிறகு இன்றுதான் வரலாறு காணாத வகையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் முட்டை விலை பண்ணைகொள்முதல் விலை அதிகரித்ததன் காரணமாக சில்லறை கடைகளில் 50 காசுகள் உயர்த்தப்பட்டு விற்பனையாகும் என்று கோழி பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.