டப்பிங் பணிகளை விறுவிறுப்பாக தொடங்கிய குருதியாட்டம்.!

 குருதியாட்டம் படத்திற்காக டப்பிங் செய்யும் பிரியா பவானி சங்கரின் புகைப்படம்

By ragi | Published: Jun 05, 2020 03:17 PM

 குருதியாட்டம் படத்திற்காக டப்பிங் செய்யும் பிரியா பவானி சங்கரின் புகைப்படம் வைரபலாகி வருகிறது.

அதர்வா தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று குருதியாட்டம். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஸ்ரீகணேஷ் வெற்றி படமான 8தோட்டாக்கள் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது .ஒரு குழந்தையை விபத்துக்கு பின்னர் ஹீரோ எவ்வாறெல்லாம் காப்பாற்ற போராடுகிறார் என்பதே குருதியாட்டம் படத்தின் கதை என்று இயக்குனர் வெளிப்படுத்தி இருந்தார்  .

ஊரடங்கு காரணமாக அனைத்து பணிகளும் முடக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் தமிழக அரசு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அனுமதி வழங்கியதை அடுத்து, இந்த படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது பிரியா பவானி சங்கர் அவருக்கான டப்பிங்கை முடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. குருதியாட்டம் படத்திற்காக டப்பிங் செய்யும் அவரது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

Step2: Place in ads Display sections

unicc