வதந்திகளை நம்ப வேண்டாம்… சமந்தா நன்றாக இருக்கிறார்.! வெளியான புது தகவல்.!

நடிகை சமந்தா அடிக்கடி தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் சில  புகைப்படங்களை வெளியீட்டு எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர். ஆனால் கிட்டத்தட்ட சில நாட்களாகவே அவர் தன்னுடைய எந்த புகைப்படங்களையும் வெளியிடாமலே இருக்கிறார்.

samantha

இதனால் சமந்தாவுக்கு ஸ்கின் அலர்ஜி ஏற்பட்டுள்ளது என்றும் அதனால் தான் அவர் சமீப காலமாக வெளியே வரவில்லை எனவும் ஸ்கின் அலர்ஜியை சரி செய்ய அவர் சிகிச்சைகாக வெளிநாடு செல்லவுள்ளதாகவும் வதந்தி தகவல்கள் பரவியது.

இதையும் படியுங்களேன்- இன்னும் கொஞ்சம் நெருங்கி இருந்தா போஸ்டர் வேற லெவல்.! பேச்சிலர் நாயகியின் அடுத்த ஆட்டம்…

samantha

இந்த செய்தி உண்மையா அல்லது வதந்தியா என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், சமந்தாவின் மேலாளர் மகேந்திரா நேற்று ஊடகத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றில் சமந்தாவுக்கு எந்த ஒரு கோளாறும் இல்லை..சமந்தாவின் உடல்நிலை நலமுடன் இருப்பதாகவும், ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

samantha

சமந்தா தற்போது, விஜய் தேவரா கொண்டாவிற்கு ஜோடியாக “குஷி ” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் ‘சாகுந்தலம்’, ‘யசோதா’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment