, ,

இப்படி தூங்குகிறீர்களா? இது உங்களுக்கு ஆபத்து ஏற்படும்..!

By

தூங்கும் போது இது போன்று தூங்கினால் உங்கள் உடலுக்கு ஆபத்து ஏற்படும். 

   
   

தற்போதைய காலத்தில் தூக்கம் என்பது பலருக்கும் கிடைப்பதில்லை. சிலர் காலையில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தூங்குகிறார்கள், ஆனால் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். இன்னும் சிலர் தலையணை இருந்தால் தான் தூங்குவார்கள். சிலருக்கு தலையணை இல்லாமல் இருந்தால் தான் தூங்குவார்கள். இது போன்று பலரும் பலவிதமான பழக்கங்கள் உடையவராக இருப்பார்கள். ஒரு சிலர் வீட்டில் இரவு நேரத்தில் சிறிய வெளிச்சம் உடைய பல்ப் உபயோகித்து இருப்பார்கள். சிலர் வீட்டில் இருட்டிலேயே தூங்குவார்கள்.

இதுபோன்று மங்கலான விளக்கில் தூங்குவது குறித்த ஆய்வில் இவ்வாறு தூங்குவது பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிய வந்துள்ளது. அதில் வெளிச்சத்தில் தூங்குவதனால் உடலில் எடை அதிகரிக்கும், ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பாக வெளிச்சத்தில் தூங்குவதனால் இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், குளுக்கோஸ் அளவும் அதிகரிக்கிறது. அதிலும் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போன், லேப்டாப், டேப் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்துகின்றனர்.

இதனை அதிகமாக பயன்படுத்தினால் கண்களுக்கு சோர்வு கிட்டும். அதனால் கண்கள் பாதிப்படைவது மட்டுமில்லாமல் தூக்கமும் இன்றி இருப்பார்கள். தூங்காமல் தற்போதைய காலத்தில் தவிப்பதற்கு முக்கிய காரணம் பலரும் போன் வைத்து கொண்டு உபயோகப்படுத்துவது தான். இதனால் முடிந்த அளவு இருட்டில் தூங்க பழகுவது நல்லது. மேலும், தூங்கும் போது கண்களுக்கு மாஸ்க் போட்டு கொண்டு தூங்குவது மிகவும் நல்லது.

Dinasuvadu Media @2023