புதுப்பேட்டை படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..??

pudhupettai sneha

புதுப்பேட்டை படத்தில் சினேகா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை காயத்திரி ரகுராம் தான் நடிக்கவிருந்தாராம். 

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2006ஆம் ஆண்டு  வெளியான திரைப்படம் புதுப்பேட்டை. இது ஒரு கேங்க்ஸ்டர் படமாகும். இந்த படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மேலும் இந்த படத்தில் சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சிறந்த கேங் ஸ்டார் திரைப்படமாக உருவாகி வெளியான இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது.

இந்த நிலையில், தற்போது இந்த திரைப்படத்தில் நடிகை சினேகா நடித்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது யார் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதாவது, இந்த படத்தில் நடிகை சினேகா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை காயத்திரி ரகுராம் தான் நடிக்கவிருந்தாராம். ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்கமுடியாமல் போகிவிட்டதாக கூறப்படுகிறது.