வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..??

வாடி வாசல் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பை நடிகர் சூர்யா விரைவில் முடித்துவிட்டி இயக்குனர் வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

ஆம் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கவுள்ள இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது.

இந்நிலையில் தற்போது, வாடி வாசல் படத்திற்கான படப்பிடிப்பு கஎப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதாவது, வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.