அண்ணாத்த திரைப்படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகிறது தெரியுமா.?

அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்து வருகிறார். படத்தில் ரஜினிகாந்த் குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, ஜெகபதி பாபு, சூரி, சதிஷ், போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து அண்ணாத்த திரைப்படத்தின் டப்பிங் பணியை நடிகர் ரஜினிகாந்த் மைலாப்பூரில் உள்ள டப்பிங் ஸ்டுடியோவில் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி முடித்தார், அவரை தொடர்ந்து நடிகை மீனாவும் நேற்று படத்தின் டப்பிங் பணியை தொடங்கினார்.

இந்த நிலையில், இந்த மாதம் இறுதியில் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து தற்போது கிடைத்த தகவல்கள் என்னவென்றால், அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.