‘நத்திங் போன் 2’ எப்போது அறிமுகம் தெரியுமா..? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

‘நத்திங் போன் 2’ ஸ்மார்ட்போன் அறிமுகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை நிறுவனத்தின் சிஇஓ கார்ல் பெய் கூறியுள்ளார்.

நவீன தொழில்நுட்ப காலத்தில் ஸ்மார்ட்போன், கணினிகள் போன்ற பல சாதனங்களின் பரிணாம் என்பது அசூர வளர்ச்சி அடைந்து வருகிறது. ஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமும் போட்டிபோட்டுக்கொண்டு மக்களிடையே தங்களது தயாரிப்புகளை கொண்டுபோய் சேர்ப்பதற்கு பல புதுப்பிப்புகளை மேற்கொண்டு வருகின்றன.

Nothing Phone 2 Image source Twittertechdroider

அந்தவகையில், ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான நத்திங் டெக்னாலஜி அதன் ஸ்மார்ட்போனின் வெளிப்படையான பின்புறத்தைக் கொண்டு மக்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. நிறுவனத்தின் நத்திங் போன் 1 (Nothing Phone 1) அறிமுகமானது பயனர்களிடையே அதிக பரபரப்பைக் கண்டாலும், கேமராவின் தரம் போன்ற வழக்கமான சிக்கல்களை சந்தித்தது.

Image source TwitterTechDadu

அதனை பூர்த்தி செய்யும் விதமாக நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதை அந்த நிறுவனம் ஏற்கெனவே உறுதிப்படுத்தியிருந்தது. இந்நிலையில், நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் வரும் ஜூலை மாதத்தில் உலக அளவில் அறிமுகப்படுத்தபடும் என்று தலைமை நிர்வாக அதிகாரி கார்ல் பெய் அறிவித்துள்ளார்.

Nothing Phone 2 Image source CNET

தற்பொழுது, வரவிருக்கும் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனில் என்னென்ன சிறப்பு அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்ற தகவல்கள்களை காணலாம்.

  1. நத்திங் போன் 1-ல் உள்ள அம்சங்கள் போலவே நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிலவற்றை தவிர,
  2. நத்திங் போன் 1-ல் பயன்படுத்தப்பட்டிருக்கும் 4,500mAh பேட்டரியை விட, நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் 4,700mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.
  3. நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் வடிவமைப்பை இதுவரை நிறுவனம் வெளியிடவில்லை, எனவே இது முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கலாம்.
  4. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 SoC (Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC) என்ற உயர்தர சிப் பயன்படுத்துவதால், நத்திங் போன் 2 போனின் விலை, முதல் போனை விட அதிகமாக இருக்கும்.
  5. இந்தியாவில் நத்திங் போன் 1-ன் ஆரம்ப விலை ரூ.32,999 என அறிவிக்கப்பட்டது. நத்திங் போன் 2- விலை ரூ.40,000-க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  6. மேலும் OnePlus ஸ்மார்ட்போனில் அதே Snapdragon 8+ Gen 1 SoC உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Recent Posts

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

5 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

11 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

13 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

14 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

15 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

15 hours ago