சச்சின் - 2ல்  தளபதியை கூல்  பாயாக பார்க்க விரும்பும் இயக்குநர்.!

சச்சின்-2ல் தளபதி விஜய் அவர்களை கூல் பாயாக மீண்டும் பார்க்க ஆசை இருப்பதாக

By ragi | Published: Jul 12, 2020 04:40 PM

சச்சின்-2ல் தளபதி விஜய் அவர்களை கூல் பாயாக மீண்டும் பார்க்க ஆசை இருப்பதாக இயக்குநர் ஜான் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இவரது நடிப்பில் ஜான் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் சச்சின். டீனேஜ் பாயாக நடித்து ரசிகர்களை கவர்ந்த அந்த படத்தில் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன், தாடி பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் சந்திரமுகி படத்துடன் இறங்கியதால் தோல்வியை தழுவியது. ஆனால் இன்றும் ரசிகர்கள் இந்த படத்தை எந்த சலிப்புமின்றி பார்த்து ரசிப்பார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் சச்சின் பட இயக்குநரான ஜான் அளித்த பேட்டியில், சச்சின் 2 குறித்து கூறிய போது,விஜய்யை அப்படி ஒரு படத்தில் பார்க்க கண்டிப்பாக நான் ஆசைப்படுகிறேன் என்றும், அதை நான் இயக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் கூலான கேரக்டரில் விஜய்யை மீண்டும் பார்க்க விரும்புவதாகவும், அப்படி ஒன்று நடந்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்

Step2: Place in ads Display sections

unicc