செல்ஃபி எடுக்க வந்தது குத்தமா..? வந்தே பாரத் ரயிலில் சிக்கிய நபர்.. 6,000 ரூபாய் அபராதம்.!

ஹைதராபாத்தில் நபர் ஒருவர் டிக்கெட் எடுக்காமல் வந்தே பாரத் ரயிலில் செல்ஃபி எடுக்க சென்றுள்ளார். அப்போது செல்ஃபி எடுத்துவிட்டு கீழே இறங்க முயன்றபோது ரயிலின்  தாணியங்கி கதவுககள் மூடப்பட்டது. இதனால் பதறிய அந்த நபர் கதவை திறக்க முயன்றார். ஆனால், அவரால் திறக்கமுடியவில்லை.

பிறகு அங்கிருந்த டிக்கெட் பரிசோதகரிடம் தான் ரயிலில் பயணிக்க வரவில்லை என்றும், செல்ஃபி எடுக்க தான் ரயிலில் ஏறினேன் என்று கூறிவிட்டு , கதவை திறக்க செய்யவும் கூறி உள்ளார். அதற்கு டிக்கெட் பரிசோதகர் ரயிலில் இருக்கும் கதவுகள் தானியங்கி எனவே நாம் யாரும் அதனை துறக்க முடியாது.

ஒவ்வொரு ரயில் நிலையம் வரும்போது அந்த தானியங்கி கதவுகள் தானாகவே திறந்து விடும் அதன்பிறகு, குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே மூடிக் கொள்ளும் என்று அந்த நபருக்கு எடுத்து விவரத்தை கூறியுள்ளார். எனவே இதன் காரணமாக அந்த நபர் டிக்கெட் எடுக்காமல் செல்ஃபிகாக ஏறியதால் கிட்டத்தட்ட 190 கி.மீ பயணம் செய்தார்.

பிறகு இதுபோன்ற செயல்களில் இனிமேல் ஈடு படாமல் இருங்கள் என அந்த நபருக்கு டிக்கெட் பரிசோதகர் தகுந்த அறிவுரையை வழங்கி அனுப்பி வைத்துள்ளார். மேலும் டிக்கெட் எடுக்காமல் அந்த நபர் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்ததால் அபராதமாக 6,000 செலுத்தினார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment