தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி கைவிடப்பட்ட முதல் படம்.! வைரல் போஸ்ட்ர் இதோ.!

முதலில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி கைவிடப்பட்ட படத்தின் போஸ்ட்ர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் காம்போ என்றாலே அந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் என்று கூறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இவரது கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. அது மட்டுமின்றி தனஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் மற்றும் வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனமான கிராஸ்ரூட் இணைந்து காக்கா முட்டை உட்பட பல படங்களை தயாரித்தும் வெற்றியை பெற்றிருந்தது.

இவர்களது கூட்டணியில் முதலாவதாக வெளியான திரைப்படம் என்று பொல்லாதவன் படத்தை நினைத்திருக்கிறோம். அப்போதே இந்த படம் விஜய்யின் அழகிய தமிழ் மகன், சூர்யாவின் வேல் ஆகியவற்றுடன் போட்டி போட்டு மாபெரும் வெற்றியை கண்டது. ஆனால் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியின் முதல் படம் பொல்லாதவன் இல்லை, முதலில் இவர்கள் இணைந்த படம் ‘தேசிய நெடுஞ்சாலை’ என்று பெயரிடப்பட்டு, அதனையடுத்து சில பல காரணங்களால் கைவிடப்பட்டது. அதனையடுத்து இந்த படம் சில வருடங்களுக்கு பிறகு வெற்றிமாறன் அவர்களின் உதவி இயக்குநரான மணிமாறன் இயக்கத்தில் உதயம் என்ச்4 என்ற பெயரில் வெளியாகியது. இதில் சித்தார்த் அவர்கள் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் முதலில் உருவான படத்தின் போஸ்ட் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருந்த இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்யவிருந்தார். தற்போது தனுஷ் ரசிகர்கள் இந்த படத்தின் போஸ்ட்ரை தீயாய் பரப்பி வருகின்றனர்.