தஞ்சை பெரிய கோவிலில் 100 ஆண்டுகள் பழமையான மணி அகற்றம்.. குடமுழுக்குக்கு தயாராகும் பெரிய கோவில்..

  • தஞ்சை பெரிய கோவிலில் புதிய மணி மாட்டப்பட்டது.
  • பத்மனாதன் குடும்பத்தினர் நன்கொடையாக அளித்தனர்.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோவிலில் நூறு ஆண்டுகள் பழமையான் மணி ஒன்று மூலவர் சன்னிதிக்கு செல்லூம் வாயிலில் இருந்தது. இந்த பெரிய மணி பழுதடைந்ததால், இதை சரி செய்யவோ அல்லது புதிய மணியை பிரதிஸ்ட்டை செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற தஞ்சாவூரை சேர்ந்த பத்மனாபன் குடும்பத்தினர் சுமார் இரண்டு லட்சம் செலவில் 362 கிகி எடையில், 3.5 அடி உயரத்தில் செம்பு, காரியம், வெங்கலம் கலந்து இந்த மணியை உருவாக்கியுள்ளனர். இந்த மணிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பெற்று இந்த புதிய மணி பிரதிஸ்டை செய்யப்பட்டது. இந்த வருடத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மகாகுடமுழுக்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Kaliraj