டிசம்பர்- 31 ரீ – ரிலீஸ் ஆகும் செல்வராகவன் படங்கள்..!

Selvaraghavan movies

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் வருகின்ற டிசம்பர் – 31ஆம் தேதி பல்வேறு திரையரங்குகளில் ரிலிஸ் ஆகவுள்ளது. 

இயக்குனர் செல்வராகவன் அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை இசையமைப்பார் என்றும் படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பதாகவும் அறிவித்திருந்தார். இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

செல்வராகவன் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை வைத்து திரைப்படம் எடுப்பதில் மிகவும் சிறந்த இயக்குனர் என்று அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். அவரின் திரைப்படங்கள் அப்போது காலகட்டத்தில் வெற்றி பெறாவிட்டாலும் தற்போது அவரின் படங்களை பெரிதளவு மக்கள் விருப்புகிறார்கள்.

ரீ ரிலீஸ்

pudhupettai aayirathil oruvan

இந்த நிலையில் தற்போது முன்னதாக வெளியாகும் சில திரைப்படங்களை திரையரங்குகளில்  ரீ ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் மிகவும் சிறந்த கதைகளை கொண்ட திரைப்படங்களான புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் வருகின்ற டிசம்பர் – 31ஆம் தேதி பல்வேறு திரையரங்குகளில் ரிலிஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.