Breaking:துருக்கியின் கொடூரமான நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 2,300 ஆக அதிகரிப்பு

துருக்கி மற்றும் சிரியாவின் பரந்த பகுதிகளை உலுக்கிய 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால்  நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்துததில்  2,300 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

நூற்றுக்கணக்கானோர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது, மேலும் அப்பகுதி முழுவதும் இடிபாடு குவியலாக உள்ளதால் மீட்புப் பணியாளர்கள் அதில் சிக்கியுள்ளவர்களை தேடி வருகின்றனர் இதனால் உயிரிழப்பு  எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துருக்கியில் சுமார் 1500 இறந்துள்னனர் என்றும் 8,500 பேர் காயமடைந்துள்ளனர் என்று நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.சிரியாவின் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 430 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது, சுமார் 1,280 பேர் காயமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிரியாவின்  கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கில் 380 பேர் வரை இறந்துள்ளனர் என்றும்  நூற்றுக்கணக்கானோர் காயமடைதுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment