கானாவில் பரவும் கொடிய மார்பர்க் வைரஸ் நோய்- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, மார்பர்க் வைரஸ் நோய் மிகவும் தீவிரமான நோயாகும், இது ரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்துகிறது, இறப்பு விகிதம் 88 சதவீதம் வரை உள்ளது.

இது மேற்கு ஆபிரிக்காவில் மார்பர்க்கின் இரண்டாவது அலை ஆகும். முதன்முதலில் மார்பர்க் வைரஸ் பாதிப்பு கினியாவில் கடந்த ஆண்டு கண்டறியப்பட்டது. கடந்த மாதம் மேற்கு ஆபிரிக்க நாடான கானா, தெற்கு அஷாந்தி பிராந்தியத்தில் இரண்டு நபர்களிடமிருந்து கொடிய மார்பர்க் வைரஸின் தாக்கம் இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த வருடத்தின் முதல்முறையாக ஜூன் 27 அன்று  26 வயது ஆண் ஒருவர் இறந்தார் . இரண்டாவது  ஜூன் 28 அன்று 51 வயது ஆணும் இதற்கு பலியாகினார். இருவரும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள்.

மேலும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் உட்பட 90 க்கும் மேற்பட்ட தொடர்புகள் அடையாளம் காணப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, மார்பர்க் வைரஸ் நோய் மிகவும் தீவிரமான நோயாகும், இது ரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்துகிறது, இறப்பு விகிதம் 88 சதவீதம் வரை உள்ளது.
மார்பர்க் வைரஸ் வவ்வால்கள் உட்பட பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து பரவுகிறது.

இந்த வைரஸ் நோய் அறிகுறிகளில் அதிக காய்ச்சல், உள் மற்றும் வெளிப்புற இரத்தப்போக்கு மற்றும் கடுமையான தலைவலி ஆகியவை அடங்கும்.

author avatar
Dhivya Krishnamoorthy

Leave a Comment