நிவர் புயல்: தயார் நிலையில் 1200 தேசிய மீட்பு படை.!

நிவர் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் 1200 தேசிய மீட்பு படைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

தற்போது, நிவர் புயலானது இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

நிவர் புயல் கரையை கடக்கும்போது வெள்ளம் அல்லது நிலச்சரிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 1,200 தேசிய பேரிடர் மறுமொழிப் படை (என்.டி.ஆர்.எஃப்) மீட்புப் பணியாளர்கள் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த, சூழ்நிலையை கட்டுப்படுத்த மொத்தம் 50 என்டிஆர்எஃப் அணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், என்.டி.ஆர்.எஃப் குழு பொதுவாக 40 மீட்பு படையினரைக் கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட இரண்டு மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 22 அணிகள் முன் நிறுத்தப்பட்டுள்ளன. “இந்த 30 அணிகளில் 12 அணிகள் தமிழ்நாட்டிலும், ஆந்திராவில் ஏழு மற்றும் புதுச்சேரியில் மூன்று அணிகளிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.