#Breaking:”மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது” – டாஸ்மாக் மேலாண் இயக்குனர்

  • தமிழகத்தில் வருகின்ற ஜூன் 14 ஆம் தேதி காலை 6-00 மணி வரை ஊரடங்கை மேலும் நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
  • இதனால்,அரசிடமிருந்து மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த,கடந்த மே மாதம் 24 ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கானது வரும் ஜூன் 7 ஆம் தேதியன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில்,வருகின்ற ஜூன் 14 ஆம் தேதி காலை 6-00 மணி வரை, மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி,காய்கறி,மளிகைக்கடைகள் போன்ற சில கடைகள் மற்றும் நிறுவனங்கள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால்,டாஸ்மாக் கடை இயங்க அனுமதி இல்லை.

இந்நிலையில்,ஊரடங்கு நீட்டிக்கபட்டதன் காரணமாக,தமிழக அரசிடமிருந்து மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அந்த அறிக்கையில்,கூறப்பட்டிருப்பதாவது:

  • அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை தமிழக அரசின் மறுஉத்தரவு வரும் வரை,மூடுமாறு அனைத்து மூத்த பிராந்திய மேலாளர்களுக்கும், மாவட்ட மேலாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
  • மேலும்,டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளுக்கு அடிக்கடி சென்று கடைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அனைத்து மூத்த பிராந்திய மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
  • அனைத்து மாவட்ட மேலாளர்களும் விழிப்புடன் இருக்கவும், சட்டவிரோதமாக மதுபான விற்பனை இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்,இந்த ஊரடங்கு காலகட்டத்தில் எந்தவொரு கடைகளிலும் திருட்டுக்கு எந்த முயற்சியும் ஏற்படாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் காவல் துறையுடன் ஒருங்கிணைந்து எடுக்கப்பட வேண்டும்.
  • உங்கள் அதிகார எல்லைக்கு உட்பட்ட எந்தவொரு கடைகளிலும் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்த மாவட்டத்தில் உள்ள தடை அமலாக்க பிரிவு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
  • உங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட அனைத்து கடைகளிலும் நிறுவப்பட்டுள்ள அனைத்து சி.சி.டி.வி கேமராக்களும் சரியாக செயல்படுவதையும்,அந்த காட்சிகள் பதிவு செய்யப்படுவதையும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் உறுதி செய்வார்கள்.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

டி20 இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ ! இந்த டைம் மிஸ்ஸே ஆகாது !

BCCI : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பிசிசிஐ. ஐபிஎல் 2024 தொடர் நடைபெற்று வரும் நிலையில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை…

10 mins ago

டி20 உலக கோப்பை… மார்க்ரம் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…

2 hours ago

வின்னர் படத்தை வச்சு தெலுங்கு சினிமாவை பழி வாங்க முயன்ற சுந்தர் சி! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி?

Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.  இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…

2 hours ago

கென்யாவில் நிற்காத மழை! அணை உடைந்து 50 பேர் பலியான சோகம்!!

Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…

2 hours ago

வெப்பநிலை உயரும்…மழைக்கும் வாய்ப்பு இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும்,  மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

2 hours ago

சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…

2 hours ago