, , ,

#CSKvRR: வெற்றியை தொடருமா சென்னை? பலம், பலவீனம் குறித்த ஒரு பார்வை!

By

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 12-ம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 12-ம் போட்டியில் சதல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சென்னை -ராஜஸ்தான் அணிகள் இதுவரை 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியது. இதில் சென்னை அணி 14 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் மும்பை மைதானம் பேட்டிங்க்கு சாதகமான ஆடுகளம் என்பதால், இரு அணிகளும் அதிக ரன்களை குவிக்க வாய்ப்புள்ளது.

சென்னை அணி:

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் கெய்க்வாட், கடந்த இரண்டு போட்டிகளில் சரியாக விளையாட காரணத்தினால் இன்றைய போட்டியில் அவருக்கு பதில் ராபின் உத்தப்பா களமிறங்க வாய்ப்புள்ளது. இரண்டு போட்டிகளிலும் மொயின் அலி சிறப்பாக பேட்டிங் செய்தது, சென்னை அணிக்கு பலம்.

அவரையடுத்து அம்பதி ராயுடு, ரன்களை குவிக்கும் நிலையில், கீப்பிங்கில் அதிரடியாக இருக்கும் சென்னை அணியின் கேப்டன் தோனி இன்னும் அவரின் பேட்டிங் திறமையை வெளிப்படுத்தவில்லை. இதனால் இன்றைய போட்டியில் ஆடவேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பவுலிங்கில் தீபக் சஹார் அதிரடியான பார்மில் இருக்கும் நிலையில், அதே வேகத்தில் இன்றைய போட்டியில் அவர் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பில்டிங்கில் ஜடேஜா சிறப்பாக உள்ளது, அணிக்கு மேலும் பலம் சேர்க்கிறது.

ராஜஸ்தான் அணி:

ராஜஸ்தான் அணியில் காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் விலகியது பலவீனமாக பார்க்கப்பட்டுள்ள நிலையில், அதனை டேவிட் மில்லர் மீட்டெடுத்து நம்பிக்கை அளித்து வருகிறார். தொடக்கத்திலே சஞ்சு சாம்சன் ரன்களை குவிக்க தொடங்கியது, அணிக்கு பெரிய பலமாக பார்க்கப்படும் நிலையில், பந்துவீச்சில் உனத்கட் அதிரடிகாட்டி வருகிறார். ஆனாலும் ஆர்ச்சர் இல்லாதது, பலவீனமாக பார்க்கப்படுகிறது.

Dinasuvadu Media @2023