வெறித்தனமான ‘ஒர்க் அவுட்’..பின்னி பெடலெடுக்கும் ஜோதிகா…வைரலாகும் வீடியோ.!!

சூர்யாவை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கும் நடிகை ஜோதிகா தனது ரசிகர்களின் தொடர்ச்சி மற்றும் திரைப்பட மார்க்கெட்டை அப்படியே வைத்திருக்கும் ஒரு நடிகை என்றே கூறலாம். கடந்த 2015 ஆம் ஆண்டு ’36 வயதினிலே’ படத்தின் மூலம் பெரிய திரைக்கு ரீ-என்ட்ரி கொடுத்த நிலையில், அவர் தொடர்ச்சியாக பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும்  படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

Jyothika
Jyothika Image Source Twitter JyotikaSuriyaa

ஜோதிகாவும் சூர்யாவும் சமீபத்தில் மும்பையில் ஒரு புதிய வீட்டை அமைத்து தங்கள் குழந்தைகளான தேவ் மற்றும் தியா ஆகியோரின் கல்விக்காக அங்கு சென்றார்கள். இந்நிலையில்,  கடந்த இரண்டு ஆண்டுகளில் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜோதிகா அடிக்கடி புகைப்படங்களையும். வீடியோக்களையும் வெளியீட்டு வருகிறார்.

Jyothika
Jyothika Image Source Twitter JyotikaSuriyaa

அந்த வகையில், தற்போது ஜோதிகா தனது கைகளில் படிக்கட்டுகளில் இறங்குவது மற்றும் சமநிலையை இழக்காமல் பந்து விளையாட்டை விளையாடுவது உள்ளிட்ட நம்பமுடியாத தலைகீழ் உடற்பயிற்சிகளையும் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Jyotika (@jyotika)

மேலும், நடிகை ஜோதிகா தற்போது மம்முட்டிக்கு ஜோடியாக  ‘காதல்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அவர் தனது தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.